இத்தளம் சிறுவர் சிறுமியரின் திறமைகளை வெளிப்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டு நறுமணம் பரப்பவுள்ளது. நீங்களும் இச் சிறார்களோடு கை கோர்த்துக்கொள்ளுங்கள்.

Wednesday, May 18, 2005

jathavan's hand work

Image hosted by Photobucket.com

Sunday, May 08, 2005

jathavan's hand work

Image hosted by Photobucket.com
made by jathavan

Image hosted by Photobucket.com art by jathavan
Image hosted by Photobucket.com

Wednesday, March 30, 2005

கீர்த்தனாவால் வரையப்பட்டது

Image hosted by Photobucket.com

Tuesday, September 28, 2004

பாதுகாப்புணர்வை உங்கள் வீடு குழந்தைக்கு தருகிறதா????

சுவிற்சலாந்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பல தமிழ் குழந்தைகள் உளவியல் பாதிப்புக்குள்ளாகி வருவது பாடசாலைகளில் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் விசேட உளவியல் வைத்தியரிடம் அனுப்பப்பட்டு வருவதோடு பாடசாலையிலிருந்து மாற்றப்பட்டு பிரத்தியேக பாடசாலைகளிற்கு அனுப்பப்படுவதையும் காணக் கூடியதாக உள்ளது.

இதற்கான காரணங்களை ஆராய அதற்குரிய குழந்தைகளிற்கான வைத்தியப்பிரிவு குடும்ப அங்கத்தவர் அனைவரையும் அணுகி அவர்களது பிரச்சனைகளை ஆராய்கிறது.

அந்த வகையில் ஒரு குடும்பத்திற்கு மொழிபெயர்ப்பிற்காக போன எனக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. அங்கு எனக்கு கிடைத்த தகவல்களை வைத்து ஏன் ஒரு கட்டுரையை எழுதினால் என்ன என என்னுள் எழுந்தது. இது பலருக்கும் நன்மை தரும் என எண்ணுகிறேன்.

அந்த சிறுவன் மிகவும் அழகிய குழந்தை நல்ல குண்டு. ஆனாலும் அடிக்கடி சோர்ந்து போவதாக பாடசாலை ஆசிரியர் கூறினார் எந்த பாடத்திலும் கவனமில்லையாம். படம் கீற கொடுத்தாலும் ஒற்றையை வாங்கி வைத்துவிட்டு எங்கோ ஆழ்ந்த யோசனையில் தான் எப்போதும் இருப்பாராம். நாடிக்கு கையை கொடுத்து விழிகளை இமைக்காமல் இருப்பது நித்திய பழக்கமாகிவிட்டது.

ஆசிரியர் அந்த குழந்தையின் பெயரைக் கூப்பிட்டாலும் கேளாதது போல் இருப்பது அவரது வழமை. கிட்ட வந்து என்ன படம் கீற வில்லையா என்கிறபோது தானாம் மலங்க மலங்க விழித்தபடி படம் கீற தொடங்குவாராம். அவர் கீறும் படங்களை கூட ஆசிரியர் சேகரித்து வந்திருந்தார் அந்த வைத்தியரிடம். அத்தனையும் பல குழப்பங்களாலான சித்திரங்களாம்.

ஓ சித்திரங்களை வைத்தே ஒருவரது மனநிலையை அறிந்து கொள்ளலாம் என்கிறார் குழந்தைகளிற்கான வைத்தியர்.

மாறி மாறி கிறுக்கல்களாய் அழுவதாய் சோகத்துடன் இருப்பது போன்றதான கிறுக்கல்படங்கள். சிலதில் கண்டபடி தாறு மாறாக கிறுக்கி உள்ளார். அந்த நாள்களில் மிகுந்த சிந்தனை வசப்பட்டவராகவும் கவலை தோய்ந்த முகத்துடனும் சிறுவன் இருந்ததாக வகுப்பாசிரியர் கூறினார்.

(வகுப்பாசிரியர் அந்த சிறுவன்பற்றிய அத்தனை தரவுகளையும் திகதி நேரப்படி எடுத்து வந்தது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது)

அன்புடன் சிறுவனோடு வைத்தியர் அளவளாவினார் . விளையாடி விளையாடியே அந்த சிறுவனிடம் கேள்விகளை கேட்டது எனக்கு இன்னும் ஆச்சரியம்தான். சிறுவன் சோர்ந்து போகும் போதெல்லாம் ஒற்றையையும் கலர் பென்சில்களையும் கொடுத்து படம் கீற சொல்கிறார். அதற்கூடாக அந்த குழந்தையின் மனநிலையை தன்னால் உணர முடிகிறதாம். என்னாலும் ஓரளவு அந்த சித்திரத்திற் கூடாக அந்த குழந்தையின் மனநிலையை அறிய முடிந்தது.

அனேகமான முந்திய படங்கள் தனித்து கீறிய சிறுவன் இப்போ இருவர் மூவரது படங்களை கிற தொடங்கி இருப்பதை காணக் கூடியதாக இருந்தது. இப்படியாக இரண்டு கிழமைகள் தினமும் 2 மணிநேரம் சிறுவனோடும் வைத்தியரோடும் ஆசிரியரோடும் என்னொடும் சிறுவன் சுமூக நிலைக்கு கொண்டு வரப்பட்டான்.

(பிரெஞ்சு மொழி பெரிதாக தெரியாததால் என் உதவி அவர்களிற்கு தேவைப்பட்டது. தமிழை நன்கு அந்த சிறுவன் பேச தெரிந்திருந்தான். வயது ஏழு) தனக்கு பாதுகாப்பு உண்டென உணரவைக்க இரண்டு கிழமை எடுத்தது வைத்தியருக்கு.

அதன் பின்னர் தான் அந்த சிறுவன் தனது வீட்டு நிலையைமை மெதுமெதுவாக சிறு தயக்கத்துடன் கூறினான். வீட்டில் தாய் தகப்பன் அடிக்கடி சண்டை பிடிப்பதாகவும் தந்தை தாயை அடித்தே துன்புறுத்துவதாகவும் அப்பா புகைப்பிடிப்பது மதுபானம் அருந்துவது அம்மாக்கு பிடிப்பதில்லை எனவும் அதுவே சண்டை சச்சரவாகிறது எனவும் எம்மால் ஊகிக்க முடிந்தது.

இதனால் அம்மா வீட்டில் சமைப்பது குறைவெனவும் தான் சாப்பிடாமலே பல தடவை பாடசாலைக்கு போனதாயும் ஒரே அறையில் தான் தாம் எல்லாம் படுத்துறங்குவதாயும் (இவ்வளவு கருத்தையும் சிறுவன் சித்திரத்திற் கூடாகவே புரியவைத்தான் என்பது எனக்கு பெரிய வியப்பாக இருந்தது.

விளக்கம் கேட்கும் போது மட்டும் தயங்கி தயங்கி கூறுவதால் சிறுவர்க்கு படம் வரைதல் தான் அவர்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த வழி என வைத்தியர் கூறினார்.

பெற்றோர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள் பல புத்திமதிகள் அவர்களிற்கு வழங்கப்பட்டது. குழந்தைகளிற்கு முன்னால் சண்டை பிடிப்பதை தவிர்க்கவும் அடிப்பதை நிறுத்தவும். ஆண் குழந்தையாதலால் அங்கே தந்தையில் வெறுப்பு அதிகமாகலாம் என அறிவுரை கூறப்பட்டது. உடனடியாக வேறு வீடு மாறுமாறும் பணிக்கப்பட்டது. மகனுக்கு தனித்த அறையை கொடுக்கும் படி கூறப்பட்டது.

வெளியில் கூட்டிச்செல்வது குறைவதலால் குழந்தைக்கு தேவையான ஒட்சிசன் கிடையாததால் சிறுவன் துடினமாக சுறுசுறுப்பாக இல்லாதது தெரியவந்தது. வீட்டு யன்னல்களை ஒரு நாளைக்கு மூன்று தடவை திறந்து விடும்படி ஆலோசனை வழங்கப்பட்டது. சிறுவனுக்கு போதிய பாதுகாப்புணர்வை அந்த வீடு தரவில்லை என்பது இறுதியாக தெரியவந்தது.

குழந்தைகளிற்கான பாதுகாப்பு வீடு தானே. வீடே சிறைவாசமாகிறபோது எப்படி பாதுகாப்புணர்வு அவர்களிற்குள் தோன்றும். வீடு எப்போதும் குழந்தைகளிற்கான நந்தவனமாக காட்சி தரவேண்டும். அந்த நந்தவனத்தை உருவாக்குவது தாய் தந்தையரின் கடமையாகிறது.

குழந்தைகள் சற்று குழம்புகிறார்களா? உடனடியா ஒற்றைகளையும் கலர் பென்சில்களையும் கொடுத்து அவர்களை தனிமைப்படுத்தி விடுங்கள் இடைக்கிடை தட்டிக்கொடுங்கள் ஆதராவாக போய் அரவணைத்தக் கொள்ளுங்கள் தங்கள் மன உணர்வை வரைந்தே தள்ளி சந்தோச மனநிலைக்கு வருவார்கள் என கூறிய வைத்தியரை கரம் கூப்பி முத்தமிட்டு கைகுலுக்கி விடைபெற்றேன்.

சிறுவனுள் இப்போ ஒரு பாதுகாப்பு உணர்வு வந்ததை என்னால் உணரமுடிந்தது. ஆனாலும் தாய் தந்தையருடன் போகும் போது என்னையே அடிக்கடி பார்ப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது. பாதுபாப்புணர்வை கட்டாயம் அந்த வீடு சிறுவனுக்கு கொடுக்க வேணும் என இறைவனை பிரார்த்தித்தேன்.

குழந்தைகள் என்றாலே குழப்பம் நிறைந்தவர்கள் . இந்த குழப்பத்திற்கு காரணம் சுற்றுப்புற சூழலும் தாய் தந்தையரின் மாறுபட்ட வளர்ப்புமுறையும் என்பதை மறந்து போக வேண்டாம்.

உதாரணமாக வீட்டில் சத்தமாக தொலைக்காட்சியை போட அம்மா அனுமதிக்க மறுத்தால் அப்பா பல சமயங்களில் தொலைக்காட்சியை சத்தமாக போட அனுமதித்துவிடுகிறபோக்கு.

அப்பா ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கே காட்டூன் பார்க்க விடுவார். ஆனால் சில சமயம் அம்மா தனது சுகத்திற்காக பல மணித்தியாலம் காட்டூன் பாக்க அனுமதிப்பார்.

ஆகவே அவர்களின் குழப்பங்களிற்கு காரணம் அந்த வீட்டின் அங்கத்தவர்கள் தான். பக்குவமா குழந்தைகளின் மனம் நோகாது அணுகினால் குழந்தைகளின் திறமைகள் வளர்வதோடு குழந்தைகள் என்றாலே தொல்லை தொல்லை என கூறுபவர்களும் கூறாமல் விட்டு விடுவார்கள்.

உங்கள் குழந்தைகளை மற்றையோர் முன்னிலையில் ஒருபோதும் பேசி திட்டி அடித்து விடாதீர்கள். அது அவர்களுள் ஆறா ரணத்தை தந்து விடுவதோடு தாழ்வுமனப்பான்மையையும் வளர்த்து விடுகிறது.

(இந்த தாள்வு மனப்பான்மையால் தான் தற்கொலைகள் அதிகரித்து காணப்படுகிறது. இது தொடர்பாக இன்னொரு கட்டுரையில் தரலாம் என உள்ளேன்.)

தாராளமாக மற்றவர் முன்னிலையில் உங்கள் குழந்தையை பற்றி பெருமிதத்துடன் அவர்களின் திறமைகளை கூறலாம் அவை பல நன்மைகளை தரும். அவர்களிற்கு அது ஒரு நல்ல ஊக்கியாக அமையும். குழந்தைகளிற்கு அடிக்கடி பாராட்டுதல்கள் தேவைப்படுகிறது. முதலில் அவர்களின் திறமைகளை பார்த்து அள்ளி அள்ளி பாராட்டுதல்களை கொடுங்கள்.

பின்னர் மெது மெதுவாக அவர்கள் விடும் பிழைகளை அன்பாக கூறுங்கள். திருத்திக்கொள்வார்கள். அப்படியும் திருந்தவில்லையோ இறுதியாக கொஞ்சம் காரசாரமாக உறுதியாக கூறுங்கள். அன்றோடு திருந்தி விடுவார்கள்.

பின்னர் நீங்கள் கூறும் அத்தனை சரி பிழையையும் மனம் நோகாது ஏற்கும் பக்குவத்தை அவர்கள் இயல்பாகவே பெறுவார்கள். இன்றய சிறார்கள் நாளைய வழிகாட்டிகள்.

இத்தகைய மாறுபட்ட கையாளல்களால் அவர்களின் மனநிலையை அறிவது மிக கடினமே. ஆகையால் குழந்தைகளை நல்வழிப்படுத்தி உயரிய சிந்தனை நோக்கங்களோடு வளர்க்க வீட்டு அங்கத்தவர்கள் அனைவரினதும் கையாளல் ஒன்றாக இருத்தல் வேண்டும்.

ஆனாலும் எனக்குள் விடைகிடையத ஒரு கேள்வி மனதில் எழுந்து நிக்கிறது. எம் தமிழ்ச் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சுவிற்சலாந்து பாடசாலையும் மருத்துவமும் அந்த பொற்றோருக்கான ஒரு பாதுகாப்பை கொடாது தட்டிக்கழித்து வருவது தான்.

தமிழ்ப்பெற்றோர்களின் வாழ்வியல் சூழல் பல சிக்கல் நிறைந்து வருவதால் தான் பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகிறார்கள் என்பது கண் கூடாகிறது.

சம்பளத்தில் மேலதிக வரியாக பத்து வீதம் என்றும் தண்டம் என்றும் வதிவிட அனுமதிப்பத்திரங்களை வழங்காது இழுத்தடிப்பதும்---- இப்படியாக பட்டியல் நீள்கிறது. சுவிற்சலாந்து அரசு எப்போது இவை பற்றி சிந்திக்கப்போகிறது.??

குழந்தைகளிற்கான பாதுகாப்புணர்வை உறுதிப்படுத்தி வைத்தியர் அந்த சிறுவனை வீட்டுக்கு அனுப்பினாலும் அந்த வீடு அவனுக்கான பாதுகாப்புணர்வை மீண்டும் கொடுக்குமா?? என இரண்டாவது தடவையாக விடைதெரியா கேள்வி என்மனதில் உறுத்தலாக.

எம் தமிழ்ச் சிறார்கள் சிலர் பெற்றோரிடத்தில் இருந்து பிரிக்கப்பட்டு அதற்குரிய பாடசாலைகளில் அத்தனை பாதுகாப்புணர்வோடும் தங்குமிட வசதிகளோடும் படிப்பித்தல் நடக்கிறது.

குழந்தைகளிற்காக பெருந்தொகைப்பணத்தை செலவு செய்யும் அரசு பல வழிகளிலும் தனது நாட்டிற்கு உழைத்து உருக்குலையும் தமிழர் பற்றி அசண்டையாக இருப்பது வேதனை தான்.

முற்றும்.


திருமதி. நளாயினி தாமரைச்செல்வன். சுவிற்சலாந்து. 5-02-2003


Saturday, September 18, 2004


Harrshinny &Haarinny at Rasta in Norway Posted by Hello

Friday, September 17, 2004


கீர்த்தனாவால் வரையப்பட்டது Posted by Hello

Thursday, September 16, 2004


கீர்த்தனாவால் வரையப்பட்டது Posted by Hello


கீர்த்தனாவால் வரையப்பட்டது Posted by Hello


யாதவனால் வரையப்பட்டது Posted by Hello


கீர்த்தனா & யாதவன் சியோன், சுவிற்லாந்து Posted by Hello